ஜனவரி 25 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 25, 2015, 05:42 PM

இன்றைய (25-01-2015) பிபிசி தமிழோசையில்

இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று கையெழுத்திட்டுள்ள பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

இலங்கையின் வடக்கே வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பிரதேசத்தில் அங்கிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் முடிந்த அளவில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக புதிய மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தம்மிடம் உறுதியளித்திருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக பேட்டி;

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடந்த காலங்களில் வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமித்திருந்த 29 பேரை அந்தப் பதவிகளிலிருந்து திருப்பியழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்; இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையை இலங்கை அரசாங்கம் இன்னும் முறையாக மீளத் தொடங்காதுள்ள சூழ்நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு சட்டவிரோதமாக இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கூறும் புதிய துணை வெளியுறவு அமைச்சர் அஜித் பெரேராவின் செவ்வி; இலங்கை தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நீடிக்க சதிசெய்தார் என்கிற குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நிலையில் அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது நியாயமான விசாரணைக்கு தடையாக இருக்கும் என்று புகார் எழுந்துள்ளது குறித்த செய்தி;

சுதந்திர இந்தியாவில் இந்திமொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த இந்தித்திணிப்பு எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் காரணமாக, இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்கிற உறுதிமொழி கொடுக்கப்பட்டதன் 50 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுவது குறித்த பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.