'மகிந்தவை தடுமாறச் செய்யக்கூடிய புதிய எதிரி மைத்திரி'

Nov 21, 2014, 07:54 PM

இலங்கை அரசியலில் மைத்திரிபால சிறிசேன என்பவர் யார்?

மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து மைத்திரிபால சிறிசேன எந்த இடத்தில் வேறுபடுகின்றார்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்த ராஜபக்ஷவின் பின்புலத்துக்கும் மைத்திரிபால

சிறிசேனவின் பின்புலத்துக்கும் இடையே பெரிய வேறுபாடு எதுவும் உள்ளதா?

ஆளும் சுதந்திரக் கட்சிக்குள் மகிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கின்ற செல்வாக்கையும் மீறி மைத்திரிபாலவால் அந்தக் கட்சிக்குள் ஆதரவைத் திரட்ட முடியுமா?

2010-இல் சரத் பொன்சேகா மகிந்தவுக்கு எதிரான பொது வேட்பாளராக களமிறங்கிய சந்தர்ப்பத்திலும் பார்க்க, இப்போது மைத்திரிபாலவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கின்றது?

சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு மைத்திரிபாலவுக்கு எந்தளவுக்கு கிடைக்கும்?

இம்முறைத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் தீர்க்கமான சக்தியாக அமைய வாய்ப்பு உள்ளதா?

மகிந்தவுக்கு போட்டியாக அவரது கட்சிக்குள்ளிருந்தே தான் ஒருவரை களமிறக்க வேண்டியிருக்கின்றது என்கின்ற நிலைமை இலங்கை அரசியலில் எதனை உணர்த்துகின்றது?

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் எதிர்காலத்துக்கு ஒரு பாதுகாப்பாக அமைய முடியுமா?

உள்ளிட்ட கேள்விகள் தொடர்பில் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான என். வித்யாதரனுடன் பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமி நடத்திய ஓர் ஆய்வுக் கலந்துரையாடல்...