செக்ஸ் அடிக்ஷன் (sex addiction) என்பது போதைக்கு அடிமையாவது போன்றதா?

Jul 15, 2014, 05:19 PM

ஆங்கிலத்தில் Sex Addiction (செக்ஸ் அடிக்ஷன்), அதாவது பாலியல் பித்தம் என்று சொல்லப்படுகிற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா? அது ஒரு நோயாக மாறி சிலரை பாதிக்கிறதா என்கிற ஆய்வு கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவ உலகில் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய பொருளாக நீடித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், போதை மருந்துக்கு அடிமையாகும் மனிதர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களைப் போன்றே பாலியல் பித்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் மூளையிலும் மாற்றங்கள் ஏற்படுவதாக தெரியவந்திருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிபிசியின் ஜேம்ஸ் கல்லஹரின் செய்திக்குறிப்பு இன்றைய (15-07-2014) பிபிசி தமிழோசையின் அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில்...