பிப்ரவரி 16 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 16, 2015, 05:35 PM

இன்றைய (16-02-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கைப்போரின் இறுதிகட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா மனித உரிமை கவுன்சிலின் விசாரணை அறிக்கை மார்ச்மாதத்திற்கு பதில் செப்டம்பர் வரை ஒத்திவைக்க பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி;

ஐநாவின் இன்றைய முடிவு குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கள்;

இந்தியா சென்றுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி இந்தியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகையை ஒட்டி இந்திய பிரதமர் மோடியின் கருத்துக்கள்

இந்திய இலங்கை மீனவர்கள் சந்தித்துப் பேசி எடுக்கும் முடிவை இருநாட்டு அரசுகளும் நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டிருப்பதை வரவேற்பதாக தெரிவித்தார் இந்தியாவில் இருக்கும் நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருளானந்தத்தின் செவ்வி;

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும்கூட, வடபகுதி கடலில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாகவும் அவர்கள் வருகையை முற்றாகத் தடுத்து நிறுத்தக்கோரியும் மன்னார் மாவட்ட மீனவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி குறித்த செய்தி;

திருகோணமலை மாவட்டம் சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் தங்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று நடத்திய உண்ணாவிரத போராட்டம் குறித்த செய்தி;

இலங்கையின் கிழக்கே யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று மட்டக்களப்பில் நடத்திய கவனஈர்ப்பு போராட்டம் குறித்த செய்தி;

தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஆளும் அதிமுக வேட்பாளர் மிகப்பெரும் வாக்குவித்தியாசத்தில் வென்றிருப்பது குறித்த செய்திகள்;

விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.