பிபிசி தமிழோசை ஜுன் 26 நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்
சிலமாதங்களுக்கு முன்னர் ஈழத்தமிழர் பிரச்சனையை காரணம் காட்டி காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலிருந்து விலகிய திமுக, இப்போது கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவை கேட்டுப்பெற்றதன் மூலம் மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவா என்கிற கேள்விக்கு அந்த கட்சியின் பதில்
இலங்கை அரசு அமைத்திருக்கும் நாடாளுமன்றத் தேர்வுக்குழுவில் ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி பங்குபெறாது என இன்று அறிவித்திருப்பது ஏன் என்பது குறித்து அந்த கட்சியின் கருத்துக்கள்
விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி இன்று விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்
நிறைவாக பலகணியில் அகில இந்திய அளவில் சாலைவிபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பது ஏன் என்பது குறித்த பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
