ஜூன் 28 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இலங்கை அரசு 13ஆவது சட்டத்திருத்தத்தில் மாற்றம் செய்வதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்கு எதிராக இணைந்து செயற்படுவது குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் பேசியது என்ன என்பது குறித்து ரவுப் ஹக்கீமின் செவ்வி
இது குறித்து சம்பந்தரின் கருத்துக்கள்
இலங்கையின் சில பகுதிகளில், இன்னமும் ஆரம்ப பள்ளிக்கூட மட்டத்திலேயே கல்வியை கைவிடும் சிறார்கள் கணிசமாக இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு நடத்திய ஆய்வு கூறியிருப்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்
இலங்கையின் கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசனக் குளத்தில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் முஸ்லிம் விவசாயிகளுக்கிடையில் இன்று ஏற்பட்ட கைகலப்பில் காயமுற்ற ஐந்து தமிழ் விவசாயிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.
