ஜூன் 29- பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்குவைத்து குற்றச்செயல்கள் நடப்பதாக அமெரிக்கா அதன் பிரஜைகளுக்கு விடுத்துள்ள பயண எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் குறித்து இலங்கை அரசின் சுற்றுலாத்துறையின் கருத்துக்கள்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டிருக்கும் தங்கத்தின் விலை வீழ்ச்சி இலங்கையில் எவ்வகையான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது குறித்த ஆய்வுக் கண்ணோட்டம்.
இந்திய இலங்கை உடன்பாட்டிற்கமைய உருவாக்கப்பட்ட இலங்கை அரசின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் மாற்றம் செய்ய இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளை இந்திய அரசு எப்படி எதிர்கொள்ளும் என்பது குறித்த ஆய்வுக் கண்ணோட்டம்
இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க முன்னதாக, அவர்களின் மனநிலையை பரிசோதிக்கும் அரசின் திட்டத்துக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்
