ஜூன் 30 தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்
இலங்கையில் மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்க வழி செய்யும் என்று கருதப்படும் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபெறாது என்று அறிவித்துள்ளது ஏன் என்பது அதன் உறுப்பினர் சுமந்திரன் தெரிவிக்கும் தகவல்கள்
அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் முத்து சிவலங்கத்தின் பேட்டி
வட- இலங்கையின் பொருளாதார நிலை குறித்து வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கையின் விபரங்கள்
தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதியில் நிலத்தடியிலிருந்து எரிவாயு எடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அரசு அதை கைவிடுவதே சரி என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வெளியிட்டுள்ள கருத்துக்கள்
இந்தியாவில் தேர்தல் செலவின விதிகள் மீறப்படுவது தொடர்பில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையாளர் கோபால்சாமியுடன் ஒரு பேட்டி.
