சர்வதேச விசாரணை மூலம் தான் நீதி கிடைக்கும்: படுகொலையான ரஜீகரின் தந்தை

Jul 05, 2013, 11:22 AM

Subscribe

திருகோணமலையில் 2006-இல் மாணவர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை காவல்துறையைச் சேர்ந்த 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

6 ஆண்டுகள் கடந்த நிலையில், இலங்கை அரசாங்கம் நீதி வழங்கும் என்ற நம்பிக்கை இல்லை என்று படுகொலையான மாணவர்களில் ஒருவரான ரஜீகரின் தந்தை டாக்டர் மனோகரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.