ஜுலை 10 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 10, 2013, 04:27 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்

நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்த எவரும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்,

இலங்கையின் நுவரெலியா அருகே ராமாயண நாயகி சீதை அக்கினி பரீட்சை செய்ததாகக் கூறப்படும் இடத்தில் சீதைக்கு கோவில் கட்டும் இந்தியாவின் மத்தியப் பிரதேச அரசின் முடிவின் பின்னணியை அலசும் செவ்விகள்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் வழங்கிய உறுதி மொழியை அடுத்து அவர்களது உண்ணாவிரதம் கைவிடப்பட்டது குறித்த செய்திகள்

மற்றும் பன்னாட்டுக்கண்ணோட்டம் ஆகியவற்றை கேட்கலாம்.