ஜூலை 11 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் இலங்கையின் 13 ஆவது சட்டத்திருத்தம் மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து விவாதிக்க அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்வுக் குழு பொதுமக்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்துள்ளது மற்றும் இதர விஷயங்கள் குறித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிக்கும் கருத்துக்கள்
வட மாகாணம் உட்பட மூன்று மாகாண சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பிலான தகவல்கள்
இலங்கையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கத்தோலிக்க தேவாயலயம் தாக்கப்பட்டதில் பொதுபல சேனாவுக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது பற்றிய செய்திகள்
இந்தியாவின் புதிய தேசிய விளையாட்டுக் கொள்கையின் கீழ் கிரிக்கெட் வாரியம் வருமா என்பது குறித்து மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதனுடன் ஒரு பேட்டி
இந்தியாவிலிருந்து இலங்கை வழியாக கடத்தபடவிருந்த பெருமளவிலான கடல் பல்லிகள் எனப்படும் ஒருவகை மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ள விபரங்கள்
ஆகியவை இடம்பெறுகின்றன.
