ஜூலை 16 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணமல் போன ஊடகவியலாளர் குறித்து தான் முன்பு கூறிய கருத்துக்களுக்கு முரணான கருத்துக்களை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறித்த செய்திகள் அதைத் தொடர்ந்து
ஒலி தடை செய்யப்பட்ட இகிலென மலுவோ திரைப்பட இயக்குனர் அளித்த செவ்வி பிறகு மாட்டிறைச்சியை ஏற்றிச் செல்ல வைக்கப்பட்டிருந்த லாரி கொழும்பில் கொளுத்தப்பட்டுள்ளது குறித்த தகவல்கள்
அதைத் தொடர்ந்து
வட மாகாணம் உள்ளிட்ட விரைவில் நடைபெற உள்ள மூன்று மாகாண சபைத் தேர்தலில் தனியாக களமிறங்கப் போவதேன் என்பது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அளித்த விளக்கம் .
தமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் பண நோக்கில் நடக்கின்றதா என்பது குறித்த செய்திகளும் நிகழச்சியின் இறுதியாக அனைவருக்கும் அறிவியலும் இடம்பெறும்
