'வட-இலங்கை முதலமைச்சரை நானே தீர்மானிப்பேன்': ஈபிடிபி தலைவர் டக்ளஸ்

Jul 21, 2013, 05:14 PM

Subscribe

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கக் கூட்டணியின் கீழேயே ஈபிடிபி கட்சி போட்டியிடும் என்று கூறியுள்ள அக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தமது கூட்டணி வெற்றிபெற்றால் வட- இலங்கையின் முதலமைச்சரை தீர்மானிக்கும் தார்மீக பொறுப்பும் அதிகாரமும் தனக்கே உண்டு என்று கூறியுள்ளார்.

வடக்கு தேர்தல் பிரச்சாரங்கள் தனது தலைமையிலேயே நடப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் மேலும் தெரிவித்தார்.