பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- ஆகஸ்ட் 05
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் முதலில் செய்தி அறிக்கை பின்னர் தொடரும் செய்தி அரங்கில்,
கொழும்புத் துறைமுக விஸ்தரிப்புத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் முடிந்த நிலையில், புதிய முனையத்தை ஜனாதிபதி திறந்து வைத்திருப்பது பற்றிய செய்திக்குறிப்பு.
இந்த விஸ்தரிக்கப்பட்ட கொழும்புத் துறைமுகம் தென்னிந்திய துறைமுகங்களுக்கு மேலும் போட்டியை ஏற்படுத்துமா என்பது குறித்த இரண்டு பேட்டிகள்.
இந்தியாவில் மத்திய அரசு உணவுப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ள நிலையில், இந்த மசோதாவை முதலில் எதிர்த்த திமுக இப்போது ஆதரிக்கிறது என்று ஜெயலலிதா கண்டனம் செய்திருப்பது பற்றி திமுகவின் டி.ஆர்.பாலு தெரிவிக்கும் கருத்து
உலகின் முதல் செயற்கை மாட்டிறைச்சி பர்கர் இன்று சமைக்கப்பட்டு ருசி பார்க்கப்பட்டிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு
பின்னர் விளையாட்டரங்கம் ஆகியவை
இடம்பெறுகின்றன.
