ஆகஸ்டு 7 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 07, 2013, 04:23 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டருகே நடந்த சம்பவத்தில் ஐந்து இந்தியப் படையினர் கொல்லப்பட்ட்து நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருப்பது பற்றிய செய்தி, மற்றும் இந்திய பாகிஸ்தான் உறவுகளில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஒரு பேட்டி

இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கையில் சிறைப்பிடிக்கப்படுவது பற்றி இந்தியா இலங்கைத் தூதர் பிரசாத் காரியாவசமிடம் தனது கண்டனத்தைத் தெரிவித்த்து பற்றி காரியவசம் தெரிவிக்கும் தகவல்கள்

இந்தியாவில் மத்திய அரசு உணவுப் பாதுகாப்பு மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்த மசோதாவுக்கு தமிழகத்தை ஆளும் அதிமுக ஏன் எதிர்க்கிறது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை தெரிவிக்கும் கருத்து

இலங்கையில் பல்கலைக்கழகத்தில் இடம் பிடிக்க கிளிநொச்சி மாவட்டம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கும் பழக்கத்தை தடை செய்யக் கோரி வழக்கு குறித்த செய்தி

ஆகியவை இடம்பெறுகின்றன