ஆகஸ்ட் 22 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 22, 2013, 04:42 PM

Subscribe

ஆஸ்திரேலியாவில், அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதை ஐ நாவின் மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக கண்டித்துள்ள செய்திகள்.

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், அதை ஸ்திரமாக வைத்திருப்பதே அரசின் நோக்கம் என்று நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ள விபரங்கள்.

இலங்கைத் தமிழர் ஒருவர் தமிழகத்திலிருந்து திருப்பி அனுப்பப்படுவதை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது பற்றிய தகவல்

கிழக்கு இலங்கையிலுள்ள மூதூர் நகரில் முஸ்லிம் மக்களின் சில வர்த்தக நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது குறித்த செய்திகள்

சென்னை நகரில் முச்சக்கர வாகன கட்டணங்கள் தொடர்பான ஒரு சிறப்பு பெட்டகம்.