ஆகஸ்ட் 29 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 29, 2013, 05:00 PM

Subscribe

இன்றைய பிபிசி தமிழோசையில்,

இலங்கை சென்றிருக்கும் ஐநா மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவி பிள்ளையை இலங்கையின் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் சந்தித்து பேசியிருப்பது குறித்த செய்தி

நவி பிள்ளையுடன் வந்திருக்கும் ஐநா அதிகாரிகளை சந்தித்த இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் கருத்துக்கள்

இலங்கை சிலாபம் முன்னீஸ்வரம் பத்ரகாளி ஆலயத்தில் மிருக பலி கொடுப்பது சட்டவிரோதமென நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்த செய்தி

இலங்கையின் வடக்கே ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையிலான ரயில் சேவையின் சோதனை ஓட்டம் தொடர்பான செய்தி

இந்தியன் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரை கைது செய்துள்ளதாக இந்திய அரசு அறிவித்திருப்பது குறித்த செய்தி

தமிழ்நாட்டின் நரிக்குறவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்த செய்தி

ஸ்கைப் பயன்பாட்டுக்கு வந்து பத்து ஆண்டுகளாகியிருக்கும் நிலையில் அதன் உலகுதழுவிய பயன்பாடு குறித்த செய்திக்குறிப்பு ஆகியவற்றை கேட்கலாம்