பிபிசி தமிழோசை - ஆகஸ்ட் 30
Share
Subscribe
*சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுத்த நிலையில், அதனைத் தனியாகவேகூட முன்னெடுக்கத்தயார் என்று அமெரிக்கா தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்
*சிரியாவுக்குள் இருக்கும் நிலைமைகள் குறித்த பிபிசியின் நேரடித் தகவல்கள்;
*இலங்கை சென்றிருக்கும் ஐநா மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவி பிள்ளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பலரை சந்தித்திருப்பது குறித்த செய்திகள்;
*நவி பிள்ளையை சந்தித்தவர்களில் சிலர் அச்சுறுத்தலுக்குள்ளாவதாக தெரிவிக்கும் கருத்துக்கள்;
*இலங்கையில் போரில் காணாமல் போனோரின் உறவினர்கள் நவி பிள்ளையை சந்தித்து தமது முறைப்பாடுகளை அளித்திருப்பது குறித்த செய்திகள்;
*விடுதலைப்புலிகள் அமைப்பால் காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் குறித்தும் ஐநா மன்றம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இன்று இராணுவத்தினரின் உறவினர்கள் நடத்திய ஆர்பாட்டம் குறித்த செய்திகள்;
*இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் 4.4 சதவீதமாக சரிந்திருப்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம் ஆகியவற்றை கேட்கலாம்.
