பிபிசி தமிழோசை- ஆகஸ்ட் 31
Share
Subscribe
இன்றைய பிபிசி தமிழோசையில்
*இலங்கையில் ஒருவாரகாலம் பயணம் மேற்கொண்ட ஐநா மன்றத்தின் மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை உள்நாட்டுப்போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் இலங்கை எதேச்சாதிகார பாதையில் செல்வதாக தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
*இவரது கருத்துக்களுக்கு இலங்கை அரசின் மறுப்பு;
*இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து நவி பிள்ளை தெரிவித்திருக்கும் கருத்துக்கள் சர்வதேச மட்டத்தில் என்னவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆய்வுக் கண்ணோட்டம்;
*இலங்கையின் வடக்கே வவுனியாவுக்கு அடுத்திருக்கும் ஓமந்தை சோதனைச் சாவடியில் இன்று சனிக்கிழமை நண்பகல் முதல் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
*இலங்கை சென்றுள்ள இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே எஸ் அழகிரி அதிபர் மஹிந்தவை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சனை குறித்து பேசியிருப்பது குறித்த செய்திகள்;
*சிரிய நிலவரம் குறித்த இன்றைய செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.
