செப்டம்பர் 7 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 07, 2013, 05:09 PM

Subscribe

இன்றைய பிபிசி தமிழோசையில் ஆஸ்திரேலியத் தேர்தலில் ஆளும் தொழிற்கட்சித் தோற்று எதிரணியில் இருந்த லிபரல் கன்சர்வேடிவ் கட்சித்தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது குறித்த செய்திகள்;

இது அங்குள்ள இலங்கை தமிழர்கள் மீது என்னவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்த செவ்வி;

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் ஆட்களை அனுப்ப உதவிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கப்பற்படை உயரதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி;

இலங்கை சிறையில் இருக்கும் 140க்கும் அதிகமான தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக மீனவர்கள் துவக்கியிருக்கும் வேலைநிறுத்தம் குறித்த செவ்வி;

ஒருபக்கம் தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில், தமிழ்நாட்டின் காற்றாலை மின்சாரத்தை வாங்காமல் தமிழக அரசு வீணடிப்பது ஏன் என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்