செப்டம்பர் 11 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 11, 2013, 04:49 PM

Subscribe

இன்றைய பிபிசி தமிழோசையில்,

சிரியாவில் அரச தரப்பும் அவர்களின் எதிர்தரப்பும் போர்க் குற்றங்களிலும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபடுவதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது குறித்த செய்திகள்;

உலக நாடுகளின் மகிழ்ச்சி குறித்து ஐநா மன்றம் தயாரித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பான செய்திகள்;

இலங்கையின் வடக்கே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கை பிரிவினைக்கு வித்திடுவதாக குற்றம் சாட்டியிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் மாகாணசபை தேர்தல்களின் அரச அலுவலர்களின் செயற்பாட்டை கண்காணிக்கப் போவதாக இலங்கையின் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;

தமிழக தலைநகர் சென்னையில் சுமார் ஒன்பது லட்சரூபாய் செலவில் வெள்ளியால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை கடலில் மூழ்கடிக்க விரும்பும் அதன் நிறுவனர்களின் செயல் சரியா என்பது குறித்த செவ்வி;

இன்றைய பலகணியில் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் கிரேக்கத்தை சீனா மீட்குமா என்பதை ஆராய் பிபிசியின் மார்க் லோவனின் பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.