செப்டம்பர் 19, 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 19, 2013, 04:47 PM

Subscribe

இன்றைய (செப்டம்பர் 19,2013) பிபிசி தமிழோசையில்,

கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் புத்தமதக் கொடி மட்டும் பறக்கவிடப்படுவது பொருத்தமற்றது என்று அங்கு சென்று திரும்பிய ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை ஆலோசனை கூறியிருப்பது குறித்து இலங்கை அரசின் கருத்துக்கள்;

இந்த பிரச்சனையை தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

இலங்கையின் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தாக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து இதுவரை விசாரிக்கப்படாத பல்வேறு கோணங்களில் தீர ஆராய வேண்டும் எனக்கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தொடர்ந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருப்பது குறித்த செய்திகள்;

தமிழக அரசின் இலச்சினையில் உள்ள கோபுரம் இந்துமத சின்னம் என்பதால் அதை அகற்றவேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கும் நிலையில் இந்த அரச முத்திரை உருவான விதம் குறித்த செவ்வி;

லண்டனிலுள்ள ஒரு நகராட்சிச் சபையில் வசிக்கும் வெளிநாட்டவர்களை முழுமையான பிரிட்டிஷாராக ஆக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறித்த பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.