செப்டம்பர் 21 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 21, 2013, 04:51 PM

Subscribe

இன்றைய (செப்டம்பர்.21,2013) பிபிசி தமிழோசையில்

இலங்கையின் வடமாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாணசபைத் தேர்தல்கள் இன்று நடந்து முடிந்திருக்கும் நிலையில் வடமாகாண வாக்காளர்கள் சிலரின் கருத்துக்கள்;

இந்த தேர்தல்கள் முழுமையான நீதியாகவும் நியாயமாகவும் நடக்கவில்லை என்று கபே என்கிற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

தேர்தல் முடிந்து முடிவுகள் வரவிருக்கும் நிலையில் கள நிலவரம் குறித்து பிபிசி தமிழோசை செய்தியாளர்கள் தரும் நேரடி தகவல்கள்;

இலங்கை விமானம் ஒன்று பிரிட்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டு அதிலிருந்த இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக, கிரிக்கெட் வாரியத் தலைவரின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த செய்திகள்;

நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்