செப்டம்பர் 25 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (செப்டம்பர்.25, 2013) பிபிசி தமிழோசையில்
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து மார்ச் மாதத்திற்குள் நம்பகமான விசாரணைகளை நடத்தி, உரிய குற்றவாளிகள் இலங்கை அரசு தண்டிக்காவிட்டால் சர்வதேச சமூகம் தனி விசாரணையை நடத்த வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;
ஐநா மன்றத்தில் பேசிய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்தின் சில நாடுகள், இலங்கையை குறிவைத்துத் தாக்குவதாக குற்றம் சுமத்தியிருப்பது குறித்த செய்திகள்;
மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்கள் குறித்து தமிழ்தேசியகூட்டமைப்பின் கருத்துக்கள்;
இலங்கையின் வடமாகாணசபைத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு வன்முறைகள் அதிகரித்திருப்பதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியிருப்பது குறித்த செய்திகள்;
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியை உருவாக்கி நடத்தியவர் என்று கருதப்படும் லலித் மோடி பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டார் என்று கூறி அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்துள்ளது குறித்த செய்திகள்;
பலகணியில் இந்தியா இலங்கை எல்லைப்பகுதியில் கஷ்மீரப்பகுதியில் அதிகரித்திருக்கும் ஷெல் தாக்குதல்கள் அந்த பகுதியில் இருக்கும் கஷ்மீரிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
