செப்டம்பர் 28 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 28, 2013, 04:42 PM

Subscribe

இன்றைய (செப்.28.2013) பிபிசி தமிழோசையில்,

இலங்கையில் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை என்றும் மத்திய அரசுக்கு மட்டுமே காணி அதிகாரம் என்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் கருத்துக்கள்;

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கை வெருகல் முருகன் ஆலயத்திற்குரிய சிலை என நம்பப்படும் முருகன் சிலையை மீட்பது தொடர்பாக தமிழக முதல்வரிடம் மீண்டும் முறையிடப்போவதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்திருப்பது குறித்து நிர்வாகிகளின் செவ்விகள்;

மாலத்தீவில் இன்று நடக்கவிருந்த அதிபர் தேர்தலில் இரண்டாம் சுற்று தேர்தல் நீதிமன்றத்தால் பின்போடப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

இரண்டாம் தலைமுறை தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி சி சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை அரைவேக்காட்டுத்தனமானது என்று திமுக குற்றம் சாட்டியிருப்பது குறித்த செய்திகள்;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்