அக்டோபர் 2 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் நீதிமன்றங்களால் குற்றவாளி என்று கண்டறியப்பட்ட நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியிழப்பதைத் தடுக்க அரசு கொண்டு வர இருந்த அவசர சட்ட முயற்சி ராகுல் காந்தியின் தலையீட்டால் விலக்கிக்கொள்ளப்படுவது பற்றிய செய்தி, இது குறித்து இந்தியப் பிரதமர் அலுவலக துணை அமைச்சர் நாராயணசாமி தெரிவிக்கும் கருத்து
மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்தளிக்க ரகுராம் ராஜன் கமிட்டி பரிந்துரைத்த புதிய விதிகள் சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில் இந்தப் பரிந்துரைகள் பற்றி பொருளாதார வல்லுநர் ஸ்ரீநிவாசன் தெரிவிக்கும் கருத்து இலங்கையின் கிழக்கே நுண் கடன் தரும் நிறுவன்ங்கள் கடனைத் திரும்பத் தரமுடியாத பெண்களிடம் பாலியல் தொல்லை தருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றிய செய்திக்குறிப்பு
வட மாகாண அமைச்சரவை உருவாக்கம் குறித்த பேட்டி
பின்னர் பலகணியில்
லண்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த ஹலால் உணவுத் திருவிழா பற்றிய ஒரு பெட்டகம்
ஆகியவை இடம் பெறுகின்றன
