அக்டோபர் 3 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (03-10-2013) தமிழோசையில்
நேபாளத்தில் நடக்கும் ஆவணப்படத் திரைப்படவிழாவில் இலங்கை தொடர்பான மூன்று ஆவணப்படங்களை தடைசெய்யும்படி இலங்கை அரசு நேபாள அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பது குறித்த செவ்வி;
இலங்கையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்கிடையிலான மோதலில் 20 மாணவர்கள் காயமடைந்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையில் ராணுவமுகாம்கள் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படவுள்ள ஒலுவில் கேசன்கேணி கிராம மக்களுக்கு உரிய அவகாசம் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான அளவுக்கு அதிகமான சொத்துக்குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவேண்டும் என்று புதிய நீதிபதி உத்தரவிட்டிருப்பது குறித்த செய்திகள்;
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விதித்திருக்கும் தண்டனை அரசியல்வாதிகள் மத்தியில் ஊழலை குறைக்குமா என்பது குறித்து சென்னை பொதுமக்கள் சிலரின் கருத்துக்கள்;
உலக அளவில் எந்த நாட்டு கடவுச்சீட்டு சர்வதேச பயணங்களை எளிதாக்குகிறது என்கிற பட்டியலில் இந்திய இலங்கை கடவுச்சீட்டுக்கள் மிகவும் பின் தங்கியிருப்பது குறித்த அலசல்;
ஐக்கியராஜ்ஜியத்தில் இருக்கும் தெற்காசிய சமூகங்களில் நடக்கும் கட்டாய திருமணங்களை தடுப்பதற்காக விமான நிலையங்களில் இருக்கும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கும் முயற்சி ஒன்று தொடங்கப்பட்டிருப்பது குறித்து பூனம் தனேஜா தயாரித்திருக்கும் பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
