அக்டோபர் 4 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 04, 2013, 04:51 PM

Subscribe

இன்றைய (04-10-2013) பிபிசி தமிழோசையில்,

இலங்கை வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ஜனாதிபதி முன்னிலையில் கொழும்பு அலரிமாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார் என சம்பந்தர் அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;

வட மாகாண முதல்வர், ஜனாதிபதி முன் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா, என்று கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், ப்ளாட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் செவ்வி;

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கடைசி மறைவிட வீட்டை ராணுவம் தகர்த்திருப்பது குறித்த செய்திகள்; தென்னிலங்கையின் தனியார் நிறுவனத்திற்கு எதிராக போராடிய வெலிவேரிய மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் இராணுவ அதிகாரிகள் தமது சட்ட எல்லையைக் கடந்து செயற்பட்டிருக்கிறார்கள் என ராணுவ விசாரணை தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் காவல்துறையைச் சேர்ந்தவரை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்கிற சந்தேகத்தின்கீழ் 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு பயணித்துக்கொண்டிருந்த மேலும் ஒரு தொகுதி இலங்கை தமிழர்கள் நடுக்கடலில் சிக்கித்தவித்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை மீட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கடைசி மறைவிட வீட்டை ராணுவம் தகர்த்திருப்பது குறித்த செய்திகள்; தென்னிந்திய மாநிலமான ஆந்திராவிலிருந்து தெலங்கானா பகுதியை தனிமாநிலமாக பிரிப்பதற்கு இந்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத்தொடர்ந்து ஆந்திராவின் தெஅலங்கானா தவிர்த்த மற்ற பகுதிகளில் நடந்து வரும் 72 மணிநேர பந்த் காரணமாக அங்கு பரவலாக வன்முறைகள் இடம்பெற்றுவருவது குறித்த செய்திகள்;

இந்திய மாநிலங்களான சத்தீஸ்கர், தில்லி, மத்திய பிரதேஷ், மிஸோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஐந்து சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதிகள் இன்று வெளியிடப் படப்பட்டுள்ளது குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.