அக்டோபர் 5 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய பிபிசி தமிழோசையில்
இலங்கை ஜனாதிபதி முன்பாக வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்கக்கூடாது என்று கண்டித்திருக்கும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை, மாகாணசபையின் ஏனைய உறுப்பினர்கள் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரியிருப்பது குறித்த செய்திகள்;
இந்த பிரச்சனை பற்றி வடமாகாண தமிழர்கள் சிலரின் கருத்துக்கள்;
பதவியேற்கவிருக்கும் வடமாகாணசபை அரசாங்கம் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் என்ன என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;
வடமாகாணசபையின் அமைச்சர் பதவிக்கு டெலோ அமைப்பின் சார்பில் யாரை நியமிப்பது என்பது தொடர்பிலான கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக செல்வம் அடைக்கலநாதன் அளித்த செவ்வி;
அடுத்தவாரம் பதவியேற்கவிருக்கும் வடமாகாணசபை அரசாங்கம், அரசியல்ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரிய சவால்களை சந்திக்கவிருப்பதாக கூறும் கொழும்புப் பல்கலைக் கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கோ. அமிர்தலிங்கத்தின் செவ்வி;
இலங்கையில் மலையகத் தமிழர்கள் வாழும் மத்திய மாகாணசபையில் இதுவரை இருந்துவந்த தமிழ்க் கல்வியமைச்சு ஒழிக்கப்படக் கூடிய அபாயம் உள்ளதாக கவலைகள் வெளியாகியுள்ளது பற்றி மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவரும் முன்னாள் தமிழ்க் கல்வியமைச்சருமான வீ. ராதாகிருஷ்ணன் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியவர்களின் செவ்விகள்;
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்ட கடற்பரப்பில் சுற்றுலாப் பயணிகள் கடலில் உல்லாசப் பயணம் மேற்கொண்டபோது படகு கவிழ்ந்ததில் ஐந்து பேர் மரணமடைந்து இருவர் காயமடைந்திருப்பது குறித்த செய்திகள்;
நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்
