இந்தியாவுக்கு வர 40 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா விதிகள் தளர்வு
Share
Subscribe
இந்திய அரசு, இந்தியாவுக்கு சுற்றுலா வர விரும்பும் , பயணிகளுக்கு விசா வழங்குவதில் சில விதிகளை தளர்த்தியிருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சீனா போன்ற 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசா பெற அவர்களின் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகாமலேயே, இணையத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு, இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவுடன் , விமான நிலையத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பில் தெற்காசிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
ஆனால் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள 60வயதுக்கு மேற்பட்ட அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் விமான நிலையத்தில் வந்து சேர்ந்தவுடன் விசா வழங்கும் வசதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து இந்திய மற்றும் இலங்கை சுற்றுலா தொழில் தொடர்பானோரின் கருத்துக்களை மேலே உள்ள ஒலி இணைப்பில் கேட்கலாம்.
