அக்டோபர் 10 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 10, 2013, 04:50 PM

Subscribe

இன்றைய (10-10-2013) பிபிசி தமிழோசையில்,

இலங்கையின் வடமாகாணசபையின் அமைச்சர்கள் பெயரை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமை அறிவித்திருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு தமக்கு உடன்பாடானதல்ல என்று ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், பிளாட் அமைப்பின் சித்தார்த்தன் ஆகியோர் பகிரங்கமாக எதிர்த்திருப்பது குறித்து அவர்களின் செவ்விகள்;

காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இலங்கை அரசின் கைப்பாவையாக செயற்படுவதாக கேனடா சுமத்திய குற்றச்சாட்டுக்கு காமன்வெல்த் செயலகத்தின் பேச்சாளரின் எதிர்வினை;

இந்திய அரசியலை உலுக்கிய இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கைக்கு பாரதீய ஜனதா கட்சியும் திமுகவும் தத்தமது மாற்றுக்கருத்துக்களை பதிவு செய்திருப்பது குறித்த செய்திகள்;

தமிழகத்தில், தூத்துக்குடி அருகே,தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர் இன்று வியாழனன்று கல்லூரி வளாகத்திலேயே,மாணவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

தனது இருநூறாவது டெஸ்ட்டுக்குப் பிறகு கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஒய்வு பெறப்போவதாக சச்சின் டெண்டூல்கர் இன்று அறிவித்துள்ளது தொடர்பான செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.