அக்டோபர் 12 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 12, 2013, 04:56 PM

Subscribe

இன்றைய பிபிசி தமிழோசையில்

இந்தியாவின் ஒரிசாவில் கரைகடந்திருக்கும் பைலின் புயல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புக்கள் குறித்த நேரடி செய்திகள்;

இலங்கை கடற்கரைப்பகுதியில் வீசிய கடுமையான காற்றில் படகுகள் பல சேதமடைந்திருப்பதுடன் காணமால் போயிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் வடமாகாண மந்திரிசபை பதவிவேற்பில் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பங்கேற்றதற்கு அவருடைய கட்சிக்குள் எழுந்திருக்கும் எதிர்ப்பு குறித்த செவ்வி;

ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சகோதரருக்கு அமைச்சுப்பதவி கேட்டதாகவும் அது அளிக்கப்படாததாலேயே அவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அமைச்சர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியதாக வெளியாகியிருக்கும் ஊடக செய்திகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரனின் பதில்;

இலங்கையில் இந்த ஆண்டின் முதல் ஆறுமாதங்களில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.