அக்டோபர் 16 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (அக்டோபர் 16 2013) தமிழோசையில்
இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்கு கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரிட்டிஷ் பிரஜையான குரம் ஷேய்க் தொடர்பான கொலை வழக்கின் நீதிமன்ற விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரிட்டன் இலங்கையை மீண்டும் வலியுறுத்தியிருப்பது குறித்த செய்திகள்;
வடமாகாணசபை முதல்வர் சி வி விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு மறுத்திருந்த 9 மாகாண சபை உறுப்பினர்களில் ஈபிஆர்எல்எப் கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் இன்று வவுனியாவில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டது குறித்த செய்திகள்;
வடமாகாணசபை முதல்வர் சி வி விக்னேஸ்வரன் ஒரு குறிப்பிட்ட தமிழ்க்கட்சியின் சார்பானவராக மட்டும் செயற்படாமல், தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருக்கும் எல்லா கட்சிகளுக்கும் பொதுவான முதல்வராக செயற்படவேண்டும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருக்கும் தமிழ்க் கட்சிகளில் ஒன்று இன்று மீண்டும் கோரியிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையின் மலையகத்தில், அரசால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேலான தொழிலாளர்களின் EPF, ETF மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளில் நடந்திருக்கும் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்திருப்பது குறித்த செவ்வி;
இலங்கையின் கிழக்கில் நிலவும் கடும் வறட்சியின் மோசமான பாதிப்புக்கள் குறித்த செய்திகள்;
இந்திய அரசு நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு வழங்கியது தொடர்பான ஊழல் வழக்கில், நிலக்கரி சுரங்கங்களை தனது நேரடி அதிகாரத்தில் வைத்திருந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மீதும் வழக்கு தொடுக்கப்படவேண்டும் என்று இந்திய அரசின் நிலக்கரித்துறை முன்னாள் செயலர் பி.சி.பாரக் கோரியிருப்பது குறித்த செய்திகள்;
நிறைவாக பலகணியில் இந்திய தபால் சேவை இன்னமும் தேவையா என்பதை ஆராயும் பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
