அக்டோபர் 17 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 17, 2013, 04:23 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்த அனுமதித்த விஷயத்தில் பிரிட்டன் மிகவும் பணிந்து போயிருப்பதாக பிரிட்டனின் நாடாளுமன்ற வெளியுறவு அமைச்சக கமிட்டி உறுப்பினர்கள் குழு விமர்சித்திருப்பது பற்றிய செய்தி

இலங்கையில் போருக்குப் பின்னரும் சிறுபான்மை சமூகங்களைசேர்ந்த பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாக தன்னார்வக்குழு ஒன்று தெரிவிக்கும் குற்றச்சாட்டு பற்றிய குறிப்பு

உலகிலேயே மிக அதிக அடிமைத் தொழிலாளர்கள் இருக்கும் நாடு இந்தியா என்று வரும் ஒரு ஆய்வு பற்றிய தகவல்கள் இதன் பின்னணியில் தமிழகத்தில் ஒரு நூற்பாலையிலிருந்து வட இந்திய பெண் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட்து பற்றிய இரு பேட்டிகள்

தங்கம் இருப்பதாக சாது கனவு கண்டு, அந்த இடத்தை தோண்ட இந்திய தொல்லியல் ஆய்வுக் கழகம் முடிவு செய்திருப்பதைப் பற்றிய செய்திக்குறிப்பு

ஆகியவை கேட்கலாம்