அக்டோபர் 18 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 18, 2013, 04:38 PM

Subscribe

இன்றைய (அக்டோபர் 18, 2013) பிபிசி தமிழோசையில்

இலங்கையின் வடக்கே வவுனியாவில் உள்ள சிறுவர் இல்ல சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பிக்குமீது நடவடிக்கை எடுக்கும்படி சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் கோரியிருப்பது குறித்த செய்திகள்;

தெற்காசியாவின் மிகப்பெரிய கேசினோ எனப்படும் சூதாட்டவிடுதியை இலங்கையில் அனுமதிக்கும் அரசின் முடிவுக்கு மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

தமிழ்நாட்டின் முத்துராமலிங்கத் தேவரின் நினைவுநாளை ஒட்டிய வன்முறைகளில் தீக்காயம் பட்டவர்களுக்கும் தமிழக அரசு வேலை அளிக்கப்பட்டிருப்பது சரியா என்பது குறித்த செவ்வி; தூத்துக்குடி அருகே கடலோரக் காவல் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட அமெரிக்க கப்பலின் ஊழியர்கள் 33 பேர் இன்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

உத்திரப்பிரதேச சாமியாரின் கனவில் தெரிந்த தங்கப்புதையலை தேடி நிலத்தை தோண்டும் பணிகள் துவங்கியிருப்பது குறித்த செய்திகள்;

வங்காளிகளின் துர்காபூஜாக்கள் வணிகமயமாவது குறித்த பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்