அக்டோபர் 19 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (அக்டோபர் 19, 2013) பிபிசி தமிழோசையில்
மாலத்தீவு அதிபர் தேர்தலின் மறுவாக்குப்பதிவை அந்நாட்டு காவல்துறை பலவந்தமாக நிறுத்தியிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கை வவுனியாவில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பிக்குவை கைது செய்யாமலிருப்பது ஏன் என்பது குறித்து காவல்துறையின் பதில்;
அந்த சிறுவர் இல்லத்தை நடத்திய பிக்கு மீதே தனது மகன் குற்றம் சுமத்துவதாக அந்த சிறுவனின் தாய் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி;
இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்கும் திட்டம் தங்களின் பாசனத்தை பாதிக்குமென அந்த பகுதி விவசாயிகள் வெளியிடும் கவலைகள்;
உலகம் முழுவதும் தொடரும் சட்டவிரோத யானைத்தந்த வியாபாரம் காரணமாக ஆப்ரிக்காவின் 37 நாடுகளில் இருக்கும் யானைகள் மிக விரைவில் முற்றாக அழிந்துவிடும் என்று வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் எச்சரித்திருப்பது குறித்த செய்திகள்;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.
