அக்டோபர் 20 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 20, 2013, 05:48 PM

Subscribe

இன்றைய (அக்டோபர் 20, 2013) தமிழோசையில்,

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் காட்டுத் தீ காரணமாக மாநிலமெங்கும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள நிலவரம் குறித்த நேரடித்தகவல்கள்;

இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பிலான விவரங்களை பதிவதற்கான மேலும் ஒரு முன்னெடுப்பு குறித்த செய்திகள் மாலத்தீவு அதிபர் தேர்தலின் மறுவாக்குப்பதிவை அந்நாட்டு காவல்துறை பலவந்தமாக நிறுத்தியிருப்பது சர்வதேச அளவில் கண்டனங்களை தோற்றுவித்திருக்கும் நிலையில், அங்கே என்ன நடக்கிறது என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்

எலக்ட்ரானிக் பிளட், அதாவது மின்னணு இரத்தம் என்று அழைக்கப்படும் திரவம் மூலம் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இயக்கப்படும் புதிய அதிவேக கணினியின் மாதிரி வடிவமைப்பை பிரசித்தி பெற்ற ஐபிஎம் நிறுவனம் செயற்படுத்தி காட்டியிருப்பது குறித்த செய்திகள்;

நிறைவாக தங்கமண்ணில் தங்கிய தமிழர்கள் நெடுந்தொடர் ஆகியவற்றை கேட்கலாம்.