அக்டோபர் 21 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய பிபிசி (அக்டோபர் 21, 2013) தமிழோசையில்,
இலங்கை ராணுவத்தால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களின் நினைவிடங்களான மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்கவேண்டும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒரு சாராரின் கோரிக்கை ஏற்படுத்தியுள்ள சர்ச்சை குறித்த செய்திகள்;
மறைந்தவர்கள் தொடர்பான துயரங்களை பகிர்ந்துகொள்வது என்பது உளவியல் ரீதியில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்த ஆய்வு;
மலேரியா இல்லாத நாடாக இலங்கை தன்னை அறிவித்துக்கொண்டுள்ள நிலையில், கிழக்கிலங்கையில் உவர்நீர்ப்பகுதியில் மலேரியாவைபரப்பும் கொசுக்கள் பெருகத்துவங்கியிருப்பது மலேரியா பரவல் குறித்த கவலையை அதிகப்படுத்தியிருப்பது குறித்த செய்திகள்;
இந்திய பெருவர்த்தக நிறுவனமான டாடாவுக்கு அளிப்பதற்காக கொழும்பு கொம்பெனித் தெருவில் அரசு கையகப்படுத்தும் நிலத்தில் குடியிருப்பவர்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்திருப்பது குறித்த செய்திகள்;
கடந்த சனிக்கிழமை தமிழ்நாட்டின் கடற்பரப்பில் சிறைப்பிடிக்கப்பட்ட சீ மேன் கார்ட் கப்பலின் தலைமைப் பொறியாளர் இரண்டாவதுமுறையாக தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுவது குறித்த செய்திகள்;
விளையாட்டரங்கத்தில், இலங்கையில் அரசின் ஆதரவுடன் முன்னேற்றமடைந்துவரும் ரக்பி கால்பந்தாட்ட விளையாட்டுப் பற்றி வீரகேசரி பத்திரிகையின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் நெவில் அந்தனியின் செவ்வி ஆகியவற்றை கேட்கலாம்
