அக்டோபர் 22 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இந்திய ப் பிரதமர் மன்மோஹன் சிங் சீன விஜயத்தை தொடங்கியிருக்கும் நிலையில், இரு நாட்டு வர்த்தக உறவுகள், எல்லைப் பிரச்சினை ஆகியவைகளுக்கு இந்த விஜயம் என்ன தீர்வைப் பெற்றுத்தரும் என்பதுகுறித்த ஒரு பேட்டி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வ்வாய்க்கிரகத்துக்கு நவம்பர் 5ம் நாள் விண்கலனை ஏவ அனுப்ப முடிவு செய்திருப்பது பற்றிய செய்தி கூடங்குளம் அணுமின் நிலையம் மின் உற்பத்தியை தொடங்கி தென் மண்டல மின் தொகுப்பில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் இணைக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி
காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் வருவது குறித்த பிரச்சினையில் தமிழ்தேசியக்கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கள்
இலங்கையில் சிறைத்துறை சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஹெக்டர் யாப்பா கமிட்டியின் அறிக்கை பற்றி நீதித்துறை அமைச்சர் ரவுப் ஹ்க்கீம் தெரிவிக்கும் கருத்துக்கள்
பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
ஆகியவை கேட்கலாம்
