அக்டோபர் 25 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (அக்டோபர் 25,2013) பிபிசி தமிழோசையில்,
இலங்கையின் வடமாகாணசபையின் முதல் கூட்டம் வெள்ளியன்று கைதடியில் துவங்கியிருக்கும் நிலையில், அதில் உரையாற்றியிருக்கும் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தமது செயற்திட்டம் குறித்து செய்திருக்கும் அறிவிப்புக்கள்;
இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை ஒட்டி, இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து அங்கு சென்ற பிபிசியின் பெர்கல் கீன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தொடரின் இரண்டாவது பகுதியில் இலங்கையில் கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் சந்திக்கும் சவால்கள் குறித்த செய்தித்தொகுப்பு;
இலங்கையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் பாலியல் வல்லுறவு அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதாக பிபிசியில் வெளியான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியின் மறுப்பு;
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்களுக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கும் தொடர்புகள் ஏற்பட்டிருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில் அது குறித்த காங்கிரஸ் கட்சியின் விளக்கம்;
உலக அளவில் பெண்களின் உரிமைகள் குறித்து விவாதிக்கும் பிபிசியின் சிறப்பு ஒலிபரப்பான “100 பெண்கள்” என்கிற தலைப்பிலான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இங்கே ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும், வீட்டு வன்முறையால் பாதிக்கப்படும் இஸ்லாமிய பெண்களுக்கான புகலிடமாக விளங்கும் காப்பகம் குறித்த பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
