அக்டோபர் 26 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 26, 2013, 04:32 PM

Subscribe

இன்றைய (அக்டோபர் 26, 2013) தமிழோசையில்,

இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் கூட்டாக முடிவெடுத்திருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் வடக்கே தமிழ் தெரியாத காவல்துறையினரும், இலங்கை ராணுவமும் தொடர்ந்தும் இருப்பதை அனுமதிக்க முடியாது என்று வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்த கருத்துக்கு காவல்துறையின் பேச்சாளரின் மறுப்பு;

கல்முனை மாநகர மேயர் பதவி தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் மீண்டும் இழுபறி நிலை தோன்றியுள்ளது குறித்த செய்திகள்;

மியான்மார் என்று தற்போது அழைக்கப்படும் பர்மாவில் ராணுவ ஆட்சி படிப்படியாக ஜனநாயகமயமாக மாறிவந்தாலும் அங்கே அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்ந்தும் மோசமாக இருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டிவரும் பின்னணியில், அங்கு நேரில் சென்று அரசியல் கைதிகளின் நிலைமைகளை ஆராய்ந்த பிபிசியின் ஜோனா பிஷர் தயாரித்து வழங்கும் பெட்டகம்;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.