அக்டோபர் 27 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (27-10-2013) தமிழோசையில்,
இந்தியாவின் பிஹார் மாநிலத்தின் பாட்னாவில் நரேந்திர மோடியின் பொதுக்கூட்ட மேடைக்கு அருகே தொடர்குண்டு வெடிப்புக்கள் நடந்து ஐந்துபேர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் அங்குள்ள நிலைமைகள் குறித்த செய்திகள்;
இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப்போவதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளலாமா கூடாதா என்பது குறித்து சென்னைவாசிகளின் கருத்துக்கள்;
இலங்கையில் காணாமல்போனவர்களின் நினைவாக அமைந்துள்ள நினைவிடத்தில் நடந்த 23வது தேசிய நினைவு தின அனுஷ்டிப்பு குறித்த செய்திகள்;
நிறைவாக தங்கமண்ணில் தங்கிய தமிழர்கள் தொடரின் ஒன்பதாம் பாகம் ஆகியவற்றை கேட்கலாம்
