அக்டோபர் 28 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 28, 2013, 04:45 PM

Subscribe

இன்றைய (அக்டோபர் 28, 2013) பிபிசி தமிழோசையில்,

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண வலிகாமம் வடக்கில், இராணுவ உயர் பாதுகாப்புப் பிரதேசத்திற்குள் இருக்கும் பொதுமக்களின் வீடுகள் இடிக்கப்படுவதை கேட்கச் சென்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளர்களும் மிரட்டப்பட்ட தாக கூறப்படும் சம்பவம் குறித்த செய்திகள்;

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பது சட்டவிரோத செயல் என்று குற்றம் சாட்டும் வடமாகாணசபையின் மீன்பிடித்துறை அமைச்சர் பாலசுப்ரமணியம் டெனீஸ்வரனின் செவ்வி;

இந்தியாவின் பிஹார் மாநிலத்தின் பாட்னாவில் நரேந்திர மோடியின் பொதுக்கூட்ட மேடைக்கு அருகே நேற்று நடந்த தொடர்குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாடு தொடர்பான நடவடிக்கைகளில் பள்ளி மாணவர்கள் பலவந்தமாக அரசாங்கத்தினால் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களுடைய கல்வி பாதிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையில் நடக்கும் சிறுவர் துஸ்பிரயோகத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக தேசிய மட்டத்திலான விழிப்புணர்வு பிரசார நடவடிக்கையொன்றை இலங்கை அரசு மேற்கொண்டிருப்பது குறித்த செய்திகள்;

இந்தியாவின் பிஹார் மாநிலத்தின் பாட்னாவில் நரேந்திர மோடியின் பொதுக்கூட்ட மேடைக்கு அருகே நேற்று நடந்த தொடர்குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

தமிழக அரசு மக்கள் வரிப்பணத்தை கொண்டு தொடங்கும் திட்டங்களில் முதலமைச்சர் படங்களும் அவரது கட்சியின் தேர்தல் சின்னமும் இடம் பெறுவது சட்டவிரோதமான செயல் என்றும் அவை அகற்றப்படவேண்டும் என்றும் கோரி சமூக ஆர்வலர் ட்ராஃபிக் இராமசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறித்த செய்திகள்;

நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.