நவம்பர் 1 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (நவம்பர்.1,2013) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் இறுதிப்போரில் நடந்த மிகப்பெரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான காணொளி ஆதாரங்களை தொடர்ந்தும் வெளியிட்டுவரும் சேனல் 4 தொலைக்காட்சி, விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த இசைப்பிரியா என்கிற பெண் இலங்கை ராணுவத்திடம் உயிருடன் பிடிபடும் காட்சிகளை வெளியிட்டிருப்பது குறித்த செய்திகள்;
சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் இசைப்பிரியா தொடர்பான காணொளி திட்டமிட்ட நாடகம் என்று மறுக்கும் இலங்கை ராணுவ பேச்சாளரின் செவ்வி;
இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை இலங்கையின் காமன்வெல்த் மாநாட்டுக்கு வரும்படி தாம் அழைக்கவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கும் மறுப்பு;
கல்முனை மேயர் பதவியிலிருந்து மீரா சாஹிப் சிராஜை நீக்குவதாக அவரது முஸ்லிம் காங்கிரஸ் கட்சித்தலைமை அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையின் கிரிக்கட் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடை பயணம் ஒன்று வெள்ளியன்று வடக்கே கிளிநொச்சி நகரில் இருந்து தலைநகர் கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இந்தியா செவ்வாய்க்கு அனுப்பும் மங்கள்யான் விண்கலன் குறித்த சிறப்பு பெட்டகம்;
சஹாரா பாலைவனத்தை கடக்க முயன்றபோது தாயையும் சகோதரிகளையும் பலிகொடுத்து, உயிர்தப்பிய சிறுமி தனது கொடூரமான பாலைவனப் பயணத்தை பிபிசியிடம் விரிவாக தெரிவித்திருப்பது குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.
