நவம்பர் 2 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (நவம்பர் 2, 2013) பிபிசி தமிழோசையில்
சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த இசைப்பிரியா தொடர்பான காணொளி உண்மை என்றே தாம் கருதுவதாக தெரிவித்திருக்கும் இந்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் அது தொடர்பில் இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது எனப்தை வலியுறுத்தி இந்திய நடுவணரசு அலுவலகத்தில் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதல் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று லண்டனில் நடந்த ஆர்பாட்டம் குறித்த செய்திகள்;
இலங்கையின் கிழக்கே இருக்கும் மேய்ச்சல்தரைக்குரிய காணிகளில் அத்துமீறி பயிர்செய்யும் வெளிமாவட்ட ஆட்களை வெளியேறுமாறு அதிகாரிகள் எச்சரித்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையின் வடமேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் வில்பத்து விலங்குகள் சரணாலயத்திற்கு மத்தியில் தேசிய நெடுஞ்சாலையை ஏற்படுத்துவதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது குறித்த செய்திகள்; நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் செவ்வாய்க்கு அனுப்பும் மங்கள்யான் விண்கலம் குறித்த சிறப்பு பெட்டகத்தின் இரண்டாவது பகுதி;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.
