நவம்பர் 4 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 04, 2013, 04:25 PM

Subscribe

இன்றைய (நவம்பர் 4, 2013) தமிழோசையில்,

இலங்கையில் நடந்ததாகக்கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் தொடர்பில் நியாயமான சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்கிற ஐநா மன்றத்தின் யோசனை நடைமுறை சாத்தியமற்றது என்று காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா பிபிசியிடம் கூறிய அவரது செவ்வி;

இலங்கை அரசின் வரவு செலவு திட்டதில் அரசு கொண்டுவந்திருக்கும் புதிய நடைமுறை இலங்கையின் அரசியல் சட்டத்தை மீறவில்லை என்று இலங்கை தலைமை நீதிபதி தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

சவுதி அரேபியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர் தொடர்பாக இன்றுமுதல் அமுலுக்கு வந்திருக்கும் நிதாகத் சட்டத்தால் பாதிக்கப்படும் இந்திய தொழிலாளர்களின் நிலைமையை ஆராயும் பெட்டகத்தின் முதல் பகுதி; இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒட்டி இந்தியாவில் பல்வேறு கருத்தறியும் அமைப்புகளால் நட்த்தப்படும் கருத்துக்கணிப்புகளைத் தடை செய்வது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் இந்த யோசனைக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தெரிவித்திருப்பது சரியா என்பது குறித்து, 1998 ஆம் ஆண்டு கருத்துக்கணிப்புகளை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்ததற்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெற்றவர்களில் ஒருவரான, நக்கீரன் பத்திரிகையின் உரிமையாளரும் ஆசிரியருமான ஆர்.கோபால் அவர்களின் செவ்வி

நிறைவாக விளையாட்டங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.