இன்றைய (நவம்பர் 12) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 12, 2013, 04:27 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் உச்சிமாநாட்டில் மொரிஷியல் பிரதமர் நவின்சந்திர ராம்கூலம் கலந்துகொள்ளமாட்டர் என்று வந்திருக்கும் அறிவிப்பு பற்றிய செய்தி

இந்தியா ஒட்டுமொத்தமாக காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கவேண்டும் என்று தமிழக சட்டசபை மீண்டும் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பற்றிய செய்தி

இலங்கையின் வடக்கே வலிகாம்ம் பகுதி மக்கள் தங்கள் காணிகளுக்கு திரும்பச் செல்ல அனுமதிக்கப்படவேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் நட்த்தியது பற்றிய செய்தி இந்தியா செவ்வாய்க்கிரகத்தை ஆராய அனுப்பிய மங்கள்யான் விண்கலனை புவி சுற்றுப்பாதையில் ஒரு லட்சம் கிலோமீட்டருக்கும் மேல் உயர்த்தும் முயற்சியில் வெற்றி காணப்பட்டிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு

காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர் மீதான சங்கர்ராமன் கொலை வழக்கில் தீர்ப்பு வரும் நாள் குறிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி

பின்னர்

உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டார் என்று உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் கூறியிருப்பது குறித்த செய்தி

ஆகியவையும்

பின்னர்

அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்