நவம்பர் 13 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 13, 2013, 05:13 PM

Subscribe

இன்றைய (நவம்பர் 13, 2013) பிபிசி தமிழோசையில்,

இலங்கையின் கிழக்குக்கு செல்லவிருந்த காமன்வெல்த் மாநாட்டின் குழுவினரின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் வடக்கே செல்ல முயன்ற சேனல் 4 தொலைக்காட்சி செய்தியாளர் கெல்லம் மெக்ரேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதால், அவர் பயணம் இடையில் தடுக்கப்பட்டது குறித்த செய்திகள்;

இதேவேளை, கேலம் மேக்ரேவின் பாதுகாப்பு கருதியே , அவர்களை தொடர்ந்தும் வடக்கு நோக்கி பயணிக்கவிடாமல் கொழும்புக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுத்ததாக அரசாங்கம் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பத்தவர் கொழும்பில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

தமிழ்நாட்டில் சமீபத்தில் திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் வெளிப்புற சுற்றுச்சுவர் திடீரென இடிக்கப்பட்டிருப்பது குறித்து அதை கட்டுவித்த பழநெடுமாறனின் செவ்வி;

உலகளவில் இருநூறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நச்சுமாசுக்கள் காரணமாக பாதிப்படையக் கூடிய அபாயகரமான நிலையில் உள்ளனர் என்று சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்திருப்பது குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.