நவம்பர் 15 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (நவம்பர் 15, 2013) பிபிசி தமிழோசையில்,
இன்று இலங்கையில் துவங்கியிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பேசிய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ, காமன்வெல்த் அமைப்பானது தண்டிக்கத்தக்க, தீர்ப்பு கூறும் அமைப்பாக இருக்கக்கூடாது என்று தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அங்கு பலரை சந்தித்திருப்பது குறித்த செய்திகள்;
கேமரனை சந்திக்க முயன்ற, இலங்கையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏற்கப்பட்ட தள்ளுமுள்ளுகள் குறித்த செய்திகள்;
யாழ்ப்பாணம் சென்ற டேவிட் கேமரன் உதயன் பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்று அதன் ஆசிரியர் மற்றும் ஊழியர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்று அந்த பத்திரிக்கையின் துணை ஆசிரியர் தேவராஜனின் செவ்வி;
இலங்கையில் 1982 ஆம் ஆண்டுக்கு பின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சொத்துகள் சம்பந்தமான விபரங்களை சேகரிக்கப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது குறித்த செய்தி;
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990க்கு பின்னர் காணாமல் போன முஸ்லிம்களின் விபரங்களும் வடகிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் அறிவித்திருப்பது குறித்த செய்தி;
இலங்கை அரசுடன் இணைந்து செயற்படவே இந்தியா விரும்புவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பிபிசிக்கு அளித்த பேட்டி ஆகியவற்றை கேட்கலாம்.
