நவம்பர் 20 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 20, 2013, 05:07 PM

Subscribe

இன்றைய (நவம்பர் 20, 2013) பிபிசி தமிழோசையில்,

இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டை ஒட்டி இலங்கை சென்றிருந்த வெளிநாட்டு ஊடகங்களிடம் மத்தியில் பேசிய பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு மக்கள் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விமர்சித்திருப்பது குறித்து அவரது செவ்வி;

வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, மீள்குடியமர்ந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நடத்தியிருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகள்;

குஜராத்தில் இளம் பெண் ஒருவர் மீது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போலிசாரை விட்டு சட்டவிரோதமாக உளவு பார்க்க உத்தரவிட்டார் என்ற சர்ச்சை குறித்து அவரது கட்சியின் கருத்துக்கள்;

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வளமான அரச காணிகள் பலவும் வனப்பிரதேசமாக வர்த்தகமானியில் மத்திய அரசினால் தன்னிச்சையாக பிரகடனப்படுத்தப்படுத்தப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் தலைநகர் கொழும்பில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படைதளபதியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;

குஜராத்தில் இளம் பெண் ஒருவர் மீது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி காவல்துறையை பயன்படுத்தி சட்டவிரோதமாக உளவு பார்க்க உத்தரவிட்டது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த செய்தி;

இன்றைய பலகணியில் இந்திய திரைப்படத்திற்கு வரும் வெளிநாட்டு நடிகர்கள் குறித்த பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.